×

காந்தியின் நினைவு தினம்: திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு..!!

சென்னை: திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தியடிகள் நினைவுநாளை மத நல்லினக்க நாளாக கடைபிடிக்க திமுக முடிவு செய்திருந்தது. அதன்படி, மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்தியில், மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தியை மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜன.30ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. அதனால், ஜன.30ம் நாளன்று மாவட்டத் தலைநகரங்களில் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, காந்தியின் நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதுமே திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்னும் கருப்பொருளில் உறுதிமொழி ஏற்றனர். இந்த உறுதி ஏற்பு நிகழ்வை பொறுத்தவரை, மனிதநேயம் காப்போம், மத வெறியை விலக்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காப்போம். மதவெறி சக்திகளை வேரறுப்போம். பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம். அமைதியான இந்தியா வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.

The post காந்தியின் நினைவு தினம்: திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gandhi Memorial Day ,of Religious Reconciliation ,Dimuka Head Office ,Chennai ,Religious Reconciliation Pledge Acceptance Ceremony ,Dimuka ,Gandhi ,Gandhi Memorial Day: Religious Reconciliation Pledge ,Dinakaran ,
× RELATED காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு...